Friday, September 10, 2010

தேடல்

வன்னிப்பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்கள்

வன்னிப்பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்கள் வெளியிடத்துக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

வன்னிப்பகுதியில்  மோதலின்போது கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் உடமைகள் பலரால் அபகரிக்கப்பட்டு வன்னியைவிட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக  மிக அண்மையில்  கிளிநொச்சியில் மீழ்குடியமர்த்தப்பட்டுவரும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.இதற்கான நடவடிக்கையை கிளிநொச்சி அரச அதிபர் மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 வன்னியில் நடந்த பெரும் மோதலின்போது தமது உடமைகளை தாம் இடம்பெயரும் போது தம்முடன் புதுமாத்தளன் வரை எடுத்துச்சென்று பின்னர் அங்கு கைவிட்டுச்சென்றதாகவும் அவ்வாறான வாகனங்கள் மோட்டார் பொருட்கள் என்பன பலரால் அங்கிருந்து அகற்றப்பட்டு மறைவான இடங்களில் வைத்து முக்கிய மான பாகங்கள் களவாடப்பட்டு வன்னியைவிட்டு வெளியிடங்களுக்கு அனுப்ப்படுகின்றன.

 

இதனால் மோதலின்போது சகலவற்றையும் இழந்த நாம் மிஞ்சி இருக்கக்கூடிய வான உதிரிப்பாகங்களைக்கூட பெறமுடியாத துர்ப்பாக்கிய நிலமை மிகவும் வேதனையை தருவதாகவும் புலம்புகின்றனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வசித்த பெருமளவிலான வாகனச்சொந்தக்காருக்குரிய பதிவு ஆவணங்கள் இல்லை இந்த நிலையில் துணிந்து சென்று வாகனங்களை கோரமுடியாத நிலமையும் நிலவுகின்றது.