முல்லைத்தீவில் சகல அரச கட்டிடங்களும்

முல்லைத்தீவில் சகல அரச கட்டிடங்களும் புதிதாகவே நிர்மாணிக்கப்படவுள்ளது.
வடக்கு வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த கூட்டம் முல்லைத்தீவிலும் வவுனியாவில் நடைபெற்றது
ஜனாதிபதி செயலணி துரித அபிவிருத்தி திட்டத்தின் சிரேஸ்ட உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
வீதிகள், கல்வி, சுகாதாரம், நீர்பாசனம், வீடமைப்பு, விவசாயம் போன்ற முக்கிய விடயங்களின் அபிவிருத்தி குறித்து இங்கு ஆராயப்பட்டது நேற்று முல்லைத்தீவு அரச அதிபர் தலைமையிலும் இன்று வவுனியா அரச அதிபர் தலைமையிலும் இந்த உயர்மட்ட முக்கியத்தும் வாய்ந்த கூட்டங்கள் நடைபெற்றது போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் சகல அரச கட்டிடங்களும் புதிதாகவே நிர்மாணிக்கப்படவுள்ளது இதற்குரிய செயல்திட்ட அறிக்கை தயாரிக்குமாறு அரச அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது வவுனியா செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டபோதிலும் அதிலும் சில திருத்தங்கள் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு தேவையான நிதி வடக்கு துரித செயலணியின் மூலம் வழங்கப்படவுள்ளது
