கிழக்கு மாகாண முதல் அமைச்சர்

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் மாகாண பதில் சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம்.
கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (09.03.2010) காலை 8.45 மணியளவில் அளுநர் ரியர் அட்மிரல் மொகான விஜயவிக்கிரம முன்னிலையில் பதில் சுகாதார அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். ஆளுநர் அலுவலகத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. முன்னர் சுகாதார அமைச்சராக இருந்த ஹிஸ்புள்ளா பாராளுமன்ற தேர்தலுக்காக கடந்த மாதம் 26ஆம் திகதி தனது அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்து கொண்டார்.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் 2 மாதங்களுக்கு முதல் அமைச்சர் சிவநேசதுரை சந்தரகாந்தன் பதில் அமைச்சராக செயற்பட உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின்பின்னர் புதியவர் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். பெரும்பாலும் இவ்அமைச்சுப்பொறுப்பு அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி அரசுக்கு ஆதரவு வழங்கும் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த மக்ரூப் என்பவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


