Tuesday, September 07, 2010

தேடல்

வெள்ளையர்கள் பெரும்பான்மையாக வாழும் சுவிஸ் நாட்டில்

வெள்ளையர்கள் பெரும்பான்மையாக வாழும் சுவிஸ் நாட்டில் கறுப்பர்கள் முக்கியத்துவம் பெற கல்வியே காரணம்.டிக்கோயாவில் திருமதி சன்ரா லென்டென்மன்.

வெள்ளையர்கள் பெரும்பான்மையாக வாழும் சுவிஸ் நாட்டில் கறுப்பர்கள் முக்கியத்துவம் பெற கல்வியே காரணம் அதே போல் வாழுகின்ற ஏனைய சமூகத்தவர்களின் மத்தியில் சிறப்பாக வாழுவதற்கு பெருந்தோட்ட மக்களின் கல்வி நிலை உயர வேண்டும்.என்று சுவிஸ் நாட்டின் வெளியுறவுத்துறை பதில் செயலாளரின் உதவி உத்தியோகத்தரும் சட்டத்தரணியுமான திருமதி சன்ரா லென்டென்மன் அம்மையார் தெரிவித்தார்.

 

அபிவித்திக்கும் ஒத்துழைப்புக்குமான சுவிஸ் நிவனத்தின் நிதிப் பங்களிப்போடும் தோட்ட பொதுமக்களின் ஒத்துழைப்போடு டிக்கோயா பகுதியில் எல்ஸ்மோ, ஒட்டரி, டில்லரி கீழ் பிரிவு ஆகிய தோட்டங்களில் பிரிடோ நிறுவனத்தால் கட்டப்பட்ட புதிய முன் பள்ளிக் கட்டங்களின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்

.

 

 

பிரிடோ நிறுவனத் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தலைமையில் இடம் பெற்ற இந்த விழாவில் அபிவித்திக்கும் ஒத்துழைப்புக்குமான சுவிஸ் நிவனத்தின் தேசிய இணைப்பாளர் நிமல் தசநாயக ,பிரிடோ வெளிக்கள இணைப்பாளர் உட்பட பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

சுவிஸ் நாட்டீன் வெளியுறவுத்துறை பதில் செயலாளரின் உதவி உத்தியோகத்தரும் சட்டத்தரணியுமான திருமதி சன்ரா லென்டென்மன் அம்மையார் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

பெரும்பான்மையாக வெள்ளை இனத்தவரே வாழும் சுவிஸ் நாட்டில் கறுப்பு இனத்தவரான எனக்கு அந்த நாட்டு மக்களை போலவே ஒரே விதமான மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. எனக்கும் அங்குள்ள வெள்ளை இன மக்களுக்கும் இடையில் உள்ள நிற பேதத்தை எனது கல்வித்தகைமை இல்லாமல் செய்துவிட்டது. ஒருவருக்கு கல்வித் தகைமை இருந்தால் அங்கு வெள்ளை இன மக்களை போலவே மற்ற அனைவருக்கும் எதுவித வேறுபாடும் இன்றி பதவி உயர்வுகள் கிடைக்கின்றன. நான் இன்று உயர் பதவி வகிப்பதற்கு நான் பெற்றுக்கொணட் கல்வியே காரணம். நாம் கல்வி கற்றுவிட்டால் நம்மை மற்றவர்கள் மதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். முழச்சமூகமூம் கற்றவர்களாக மாறும் போது சமூகத்தை மற்றவர்கள் ஒதுக்கி வைத்துவிட முடியாது. பெருந்தோட்டங்களில் வாழும் மக்களாகிய உங்களுக்கு கல்வியை பெற்றுக்கொள்வதில் கடந்த காலத்தில் பல தடைகள் இருந்தது பற்றி நான் அறிந்து வைத்துள்ளேன். சிறிது சிறிதாக உங்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் கல்வியில் உயர்ந்து வருவதையும் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே நீங்கள் உங்கள் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தி குறித்து முக்கிய கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தோட்டங்களில் ஒரு காலத்தில் முன்பள்ளிகளே இருக்க வில்லை என்றும் பிரிடோ நிறுவனம் உங்கள் தோட்டங்களில் முன்பள்ளிகளை ஆரம்பித்த பின்னர் அனேகமான முன்பள்ளிகளை நடத்துவதற்கு ஒழுங்கான இடம் இல்லாததால் தற்காலிக கட்டிடங்களிலும் எதுவித வசதிகள் அற்ற இடங்களிலும் முன்பள்ளிகள் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஆனால் நீங்கள் மிகவும் வசதி குறைந்த இடங்களாக இருந்தாலும் பிள்ளைகளின் முன்பள்ளிக்கு கல்விக்கு முக்கியத்தவம் அளித்து பிள்ளைகளை தொடர்ந்து முன்பள்ளிக்கு அனுப்பி வந்தாவும் நான் அறிகிறேன். உங்களின் இந்த முயற்சிக்காக நான் உங்களை பாராட்ட வேண்டும். இப்போது உங்கள் தோட்டங்களுக்கு அழகான புதிய முன்பள்ளிகள் கிடைத்திருக்கின்றன. இந்த முன்பள்ளிகள் பிரிடோ நிறுவனத்தால் , அபிவித்திக்கும் ஒத்துழைப்புக்குமான சுவிஸ் நிறுவனம் வழங்கிய சிறிய நிதி உதவியை கொண்டும்

உங்களின் முழு பங்களிப்போடும் கட்டப்பட்டிருப்பது ஒரு விசேட அம்சமாகும். இந்த முன்பள்ளியை திறக்கும் இந்த விழாவில் நீங்கள் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கலந்து கொண்டிருப்பதை பார்ப்பதற்கு மகிழ்சியாயிருக்கிறது. ஆயினும் உங்களுடைய மகிழ்ச்சி உங்கள் பிள்ளைகள் நன்றாக கல்வி கற்று நல்ல பிரஜைகளாக உருவாகும் நாளிலேயே முழுமைபெறும் . எனவே இப்போது உங்களுக்கு கிடைத்துவரும் வசதிகளை பயன்படுத்தி உங்கள் பிள்ளைகள் முன்னேற உங்களாலான அனைத்தையும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.