Friday, September 10, 2010

தேடல்

மலையகத்தில் கடுமையான வரட்சி

மலையகத்தில் கடுமையான வரட்சி  தொழிலாளர்கள் நிவாரணங்களைக் கோருகின்றனர்.

    

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையைக்கருத்திற்கொண்டு தமக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு தோட்டக்கம்பனிகளும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மலையகப்பகுதிகளில் தற்போது நிலவுகின்ற வரட்சியான காலநிலையினால்

தேயிலைச்செடிகள் கருகத்தொடங்கியுள்ளதால் தோட்டங்கள் பலவற்றின்

தமக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட்டு வருவதாகவும் கூட்டொப்பந்த்ததில்

குறிப்பிடப்பட்டுள்ள சில கொடுப்பனவுகளைப்பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த சில மாதங்களாக மலையகத்தோட்டப்பகுதிகளில் அதிகரித்த வெப்பம்

நிலவுவதால் நீர் நிலைகள் வற்றத்தொடங்கியுள்ளன. இதனால் மேட்டு நிலங்களிலுள்ள தேயிலைச்செடிகளும் கற்பாறைகள் உள்ள பிரிதேசத்திலுள்ள தேயிலைச்செடிகளும் பெருமளவில் கருகத்தொடங்கியுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் ,கொட்டகலை ,பொகவந்தலாவை ,மஸ்கெலியா, தலவாக்கலை உட்பட பல்வேறு தோட்டப்பகுதிகளில் தேயிலைச்செடிகள் கருகத்தொடங்கியுள்ளதால் சிலதோட்டங்களில் தொழிலாளர்கள் தேயிலைச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றத்தொடங்கியுள்ளனர்.

 

மேலும் சில தோட்டங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள்

மழைபெய்ய வேண்டும் என்பதற்காகதோட்டஆலயங்களில்விசேடபூசைகளிலும்

ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறனதொரு நிலையில் தேயிலைச்செடிகள் கருகத்தொடங்கியுள்ளதால் ஒரு நாள் பெயருக்குரிய தேயிலைக்கொழுந்தினை பறிக்க முடியாத நிலைமை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் நாளாந்தம் 30 ரூபாவையும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால்

வருகைக்கொடுப்பனவான 90 ரூபாவையும் நாளாந்தம் இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் தற்போதைய காலநிலை மாற்றத்தினால் தொழிலாளர்கள்

எதிர்நோக்ககின்ற பொருளாதார பிரச்சினைகளுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு கூட்டொப்பந்தத்தொழிற்சங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

.