சுமார் 5.4 மில்லியன் ரூபாய் செலவில்

யுலிலீவர் சிறிலங்கா ஆரம்பித்துள்ள பெயார்ஸ் காக்கும் கரங்கள் முன்முயற்சியின் கீழ் செட்டிகுளம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் உள்ள சிறுவர் சிகிச்சை விடுதிகளைப் புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முறையே 15வது 16வது வேலைத்திட்டங்கள் சுமார் 5.4 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு நிர்வாகத்தினரிடம் வைபவரீதியாக கையளிக்கப்பட்டது வைபவத்தில் யுனிலீவர் பிரதிநிதிகள் திருமதி ரமணி சமரசுந்தர, திருமதி இமாசிக்கா- காரியவாசக, திருமதி வக்சலா அளுக்கெதர உள்ளிட பலர் கலந்து கொண்டனர்
சிறுவர் சிகிச்சை விடுதிகள் தரமுயர்த்தப்படுவதினால் பிரதேசங்களில் வாழும் நூற்றுக்கணக்கான தாய்மாரும் சிறுவர்களும் சிறந்த சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொள்ள கூடியதாக அமையும் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்
பெயார்ஸ் பாதுகாக்கும் கரங்கள் நிதியம் 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இலங்கையில் வாழும் சிறுவர்களின் உடல்நலப் பராமரிப்புக்கான வசதிகளை மேம்படுத்துவதே இதன் குறிக்கோளாகும் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பெயார்ஸ் உற்பத்திப்பொருளின் பேரிலும் 25 சதம் இந்த நிதியத்திற்கு வழங்கப்படுகின்றது நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மகப்பேற்று மனைகள் மற்றும் சிறுவர் சிகிச்சை விடுதிகளை புனரமைப்புச் செய்து வேண்டிய வசதிகளை ஏற்படுத்த இந்த நிதியத்திலிருந்து பணம் ஒதுக்கப்படுகின்றது என திருமதி ரமணி சமரசுந்தர தெரிவித்தார்.
பெயார்ஸ் காக்கும் கரங்கள் முன்முயற்சிக்கு அமைய இதுவரை மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களில் 27.5 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது இதனால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் நன்மை அடைந்துள்ளார்கள். இவ்வாண்டு 50வது ஆண்டினை நிறைவு செய்யும் பெயார்ஸ் சமூக நலனுக்கான சேவைகளில் தொடர்ந்தும் ஈடுபடும் என குறிப்பிட்ட திருமதி ரமணி, 1960ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட பெயார்ஸ் உற்பத்திப்பொருள்கள் அன்றுமுதல் தாய்மாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குகின்றன என்றார். செட்டிகுளத்தில் நடைபெற்ற வைபவத்தில் தள வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் கே- அகிலன் மற்றும் வைத்தியசாலை மருத்துவர்களும் ஊழியர்களும் பங்கு கொண்டனர்.
வவுனியா பொதுவைத்தியசாலை சிறுவர் சிகிச்சை விடுதி கையளிப்பு வைபவத்தில் நகர சபைத் தலைவர் ஜி- நாதன் வைத்தியசாலை அத்தியட்சகர் திருமதி டாக்டர் ரமணி ஜெயக்குமார,;; மருத்துவ கல்லூரி குழந்தை வைத்திய நிபுணர் திருமதி டாக்டர் கனியாணி குருகே ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் சிறுவர் சிகிச்சை விடுதியில் தங்கியுள்ள அனைத்து குழந்தைகளும் அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டது
