ஜனநாக மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார ஊர்தி
![]()
ஜனநாக மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார ஊர்தி தாக்குதலுக்கு உளளாக்கப்பட்டுள்ளது : நாவலப்பிட்டியில் சம்பவம்.
ஜனநாக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிதேசிய கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசனின் தேர்தல் பிரசார ஊர்தி இன்று நாவலப்பிட்டி நகரில் வைத்துத்தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்ற இந்தச்சம்பவத்தில் தேர்தல் பிரசார ஊர்தியில் பயணித்த நால்வருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்
இந்தச்சம்பவம் தொடர்பாக நாவலப்பட்டி பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாக ஜனநாக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ்கணேசன் தெரிவித்தார்.
ஆளுங்கட்சி ஆதரவாளர்களே இந்தச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். நாவலப்பிட்டி பொலீஸ் நிலையம் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேயின் அலுவலகமாக செயற்படுகிறது என்றும் மனோகணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
