200மில்லியன் ரூபாசெலவில் இரணைமடுக்குளம்
![]()
200மில்லியன் ரூபாசெலவில் இரணைமடுக்குளம் புனரமைக்கப்படவுள்ளது.
உலக வங்கியின் உதவியுடன் இரணைமடுக் குளத்தைப் புனரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு 200 மில்லியன் ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடபகுதியின் பிரதானமான நீர்த்தேக்க மையமான இரணைமடுக் குளத்தின் நீர் தாங்கும் அளவு மூன்று மடங்கால் அதிகரிக்கப்பட இருப்பதாகவும் இதன் மூலம் 6000 விவசாயிகள் பலனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது
