Tuesday, September 07, 2010

தேடல்

இலங்கைஅரசியலில் 7.4ஆக இருக்கும்பெண்களின் வீதம்

இலங்கைஅரசியலில் 7.4ஆக இருக்கும்பெண்களின்  வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் திருமலையில் தீர்மானம்.

சமாதானத்தைக்கொண்டுவர யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் இதற்கு அரசியலில் 7.4ஆக இருக்கும்பெண்களின்  வீதம் ஆதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இதன்மூலம் சமாதானத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் ,என்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் வெளிவர வாய்ப்பும் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இலங்கையில்  -யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பின் ஏற்பாட்டில்  சர்வதேச மளீர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகர மண்டபத்தில்  இன்று காலை 10.மணியளவில் ஒன்றுகூடல்  இடம்பெற்றது. இதனை  யுத்தால் பாதிக்கப்பட்ட தேசிய பெண்கள் அமைப்பு ஏற்பாடுசெய்திருந்தது. இங்கு கிளிநொச்சி ,முல்லைத்தீவு தவிர்ந்த 25 மாவட்டங்களைச்சார்ந்த யுத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்ட்ட பெண்கள் ஏதிர் கொள்ளும் பிரச்சனைகளை அறியும் பொருட்டு இடம் பெற்ற இக்கூட்டத்தில் ஜக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் திருகோணமயில் உள்ள பெண்கள் அமைப்புபிரதிநிதிகள்  என 40 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்கள் திருகோணமலையில் கவனிக்கப்படுவதற்கு நிலவும் பல்வேறு தடைகள் பற்றியும் கவனத்தில் எடுக்கப்பட்டதுடன் அதனைத்தீர்க்க அரச உயர்மட்டத்துடன் சந்திப்பபை இவ்வமைப்பு விரைவில் ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட பெணகள் அமைப்புக்கள் அணுக இருக்கும்  தடைகள் பற்றி பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்