Tuesday, September 07, 2010

தேடல்

நாவலடியில் 21பேர் கைது.

நாவலடியில் 21பேர் கைது.

 மட்டக்களப்பு நகருக்கு அண்மையிலுள்ள நாவலடி  கிராமத்திலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோத பயணத்திற்கு தயாராகவிருந்ததாகக் கூறப்படும் 21 பேர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நாவலடியில் கைவிடப்பட்ட வீடொன்றில்  தங்கியிருந்ததாகக் கூறப்படும் இந்நபர்கள் மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என  காத்தான்குடிப்பொலிஸார் தெரிவித்தனர்.

 தற்போது இவர்கள் பொலிஸாரினால் தீவிரவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.