Friday, September 10, 2010

தேடல்

மதுவினால் ஏற்படும் பாதிப்புக்கள்.

மதுவினால் ஏற்படும் பாதிப்புக்கள்.

'குடி குடியைக் கெடுக்கும்" என்பது முதுமொழி.மது உணர்வையும் உடலையும் பாதிக்கும் ஒரு நச்சுப் பொருளாகும்.அறிவும் ஆற்றலும் உயர்ந்த பண்புகளும் மிக்க சான்றோர்களின் நல்ல மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் வேண்டுமானால் கள் குடிக்கலாம் என்பதை அன்றே திருவள்ளுவர்

'உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்

எண்ணப்பட வேண்டா தார்."இவ்வாறு இயம்புகிறார். அன்றைய காலம் குடிப்பவர்களை ஒரு புழுவைப் போல பார்த்தது.ஆனால் இன்றைய சமூகம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது.உலக சுகாதார நிறுவனமும் 'மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும்,தீய செயல் என்றும்"கூறுகிறது.

 

                     மதுவானது உடல் நலத்தைப் பாதிப்பதுடன் சகல சமூக சீர்கேடுகளுக்கும் தூண்டுதலாக அமைகிறது.கொலை,கொள்ளை,கற்பழிப்பு,சண்டைசச்வரவுகள் போன்ல எல்லாவித கீழ்த்தன்மையான செயல்களும், குற்றங்களும் நடைபெற வழிவகுக்கின்றது.ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமன்றி குடும்ப வாழ்வையும் சீரழித்து சின்னாபின்னமாக்குகிறது.

ஆண்கள் 30கிராமிற்கு மேலதிகமாகவும்,பெண்கள் 20கிராமிற்கு மேலதிகமாகவும் குடிப்பதால் நிச்சயமாக கல்லீரல் பாதிப்படைகிறது.அதிலும் குடிப்பதில் 20வீதம் உடனடியாக இரத்தத்தில் கலக்குகிறது.நாம் சாப்பிடும் உணவு தேவைக்கு அதிகமானால் கல்லீரலில் தான் சேமிக்கப்படுகிறது.மதுவும் அதுபோலத்தான் கல்லீரலை அடைகிறது.அங்கு ஏற்படும் இரசாயன மாற்றங்களால் கல்லீரல் பாதிப்படைகிறது.இதனால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேருகின்றன.அதிகமாக கொழுப்பமிலங்கள் உற்பத்தியாகவும் வாய்ப்பு ஏற்கடுகிறது.இவ்வாறு உற்பத்தியாகும் கொழுப்புக்கள் கல்லீரலில் படிந்து ஈரலை பெரிதாக்கி விடுகிறது.இதனால் கல்லீரலின் செல்கள் பாதிக்கப்பட்டு Cirrhosis  எனும் நோய்நிலை ஏற்படுகிறது.மேலும் அதிகமாக இரும்புச்சத்துக்களும் படிகிறது. இதனால் உடலில் பல்வேறு குணங்குறிகள் தோன்றுகின்றன.உடல் மஞ்சளாதல்,பித்தநீர்க்குழாய் அடைப்பினால் வயிற்றுவலி,பசியின்மை போன்றன ;வற்றில் சிலவாகும்.இதைத் தொடர்ந்து புற்றுநோயும் ஏற்படலாம்.புடல் பாதை பாதிக்கப்பட்டு Cirrhosis  ஏற்படுவதுடன் உணவு;குழாயில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பாகிறது.தோளிலும் காலிலும் தசைநார்கள் செயலிழக்கிறது.உடலின் குளுக்கோசினை சீர்ப்படுத்தும் கணையம்(pancreas ) பாதிக்கப்படுகிறது.மறதி,சோர்வு என்பன ஏற்படுகின்றன. மூளை பாதிக்கப்பட்டு Korsakofts syndrome  ஏற்படுகிறது.

               மேலும் விற்றமின் பி குறைபாட்டால் wernik`s syndrome   ஏற்பட்டு நடக்கமுடியாத நிலை ஏற்படலாம்.நோய் எதிர்ப்புச்சக்தியும் குறைவதுடன் மனநோயும் ஏற்படுகிறதது.இவ்வாறு மூளை,இதயம்,நரம்பு,இனவிருத்தி உறுப்பு,இரைப்பை,கணையம் என தொடர்ந்து உறுப்புக்கள் பாதிப்படைகின்றன.

        பணத்தைக் கொடுத்து  விரைவில் பிணமாகும் நிலையை ஏன் உருவாக்க வேண்டும்? மனக்கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து மதுவை மறப்போம்.