Tuesday, September 07, 2010

தேடல்

கொலஸ்ரோலைக் குறைக்கும் வெள்ளைப்பூடு

கொலஸ்ரோலைக் குறைக்கும் வெள்ளைப்பூடு.

                       வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப்பூண்டினை நாம் எல்லா உணவுகளிலும் சேர்த்து வருகின்றோம். மேலைத்தேய நாட்டு சமையலிலும் வெள்ளைப்பூடு பெரும் பங்கு வகிக்கின்றது.

                                   நமது இரத்தக்குழாயில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பினைக் கரைத்து சிறுநீர் வழியே வெளியேற்றிவிடுகிறது.இதனால் இரத்தோட்டம் சீராக நடைபெற்று இரத்தஅழுத்தம், நாடித்துடிப்பு என்பன சீராகின்றது.மேலும் நமது நுரையீரல் , நுரையீரல் குழாய், சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் இறுக்கமான சளியை இழக்கி வெளியேற்றுகிறது.காச நோயாளிகளுக்கு இது நல்ல வரப்பிரசாதமாகும்.பாலுடன் வெள்ளைப்பூடு, மஞ்சள், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து அருந்திவர சுவாச சம்பந்தமான நோய்கள் தீரும்.

                             மேலும் நமது உடலிலுள்ள தேவையற்ற கிருமிகள், காற்று, புழுக்கள் என்பவற்றையும் வெளியேற்றுகிறது.

                          புற்றுநோயாளிகள் தினமும் வெள்ளைப்பூண்டினை சாப்பிட்டு வந்தால் விரைவில் புண்கள் குணமடையும்.நாம் உண்ணும் உணவு சமிபாடு அடையாவிடில் பச்சையாக வெள்ளைப்பூண்டினை உண்டால் சமிபாட்டுத் தன்மை ஏற்படும். நரம்புத்தளர்ச்சியையும் போக்கும் தன்மை இதற்குண்டு.

                                                 100கிராம் வெள்ளைப்பூண்டில் 62 % தண்ணீரும் , 6.3 % புரதமும், 0.1 % கொழுப்பும் , 1 % தாதுக்களும், 0.8 % நார்ச்சத்தும் ,29.8 % காபோகைதரேற்றும் காணப்படுகின்றது. மேலும் 30 mg கல்சியமும் , 310mg பொசுபருசும் , 1.3 mg இரும்பும் , 13 mg விற்றமின் C யும் காணப்படுகின்றது.

                             உணவில் தினமும் வெள்ளைப்பூண்டினை சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.