Friday, September 10, 2010

தேடல்

ஐக்கியதேசியகட்சி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்

ஐக்கியதேசியகட்சி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழ்தேசிய கூட்டமைப்பையும் இணைத்து வருகின்ற பாராளுமன்றத்தை அமைப்போம். நூர்தீன் மசூர்.

 

ஐக்கியதேசியகட்சி, சிறிலங்’கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழ்தேசிய கூட்டமைப்பையும் இணைத்து வருகின்ற பாராளுமன்றத்தை அமைப்போம் என ஐக்கியதேசியகட்சியின்  வன்னி தேர்தல்pல் போட்டியிடும் முதன்மைவேட்பாளர் நூர்தீன் மசூர் வேட்புமனுவை தாக்கல் செய்தபின்னர் இன்று வியாழன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கியதேசியமுன்னணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது என குறிப்பிட்ட இவர் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது மனேகணேசன் தலைமையிலான சனநாயக மக்கள் முன்னணியும் இணைந்துள்ளது என்றார் நூர்தீன் மேலும் கூறுகையில்-வடக்கு கிழக்கு மாகாண அதிகார பகிர்வு தொடர்பாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் வரும்காலத்தில் புரிந்துணர்வுடன் செயல்படும் நாங்கள் வெவ்வேறாக  தேர்தல் களத்தில் நின்றாலும்  தலைமைகளுக்கிடையிலான தொடர்பு உள்ளது நடைபெறபோகும்.

 பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் அமையவுள்ள புதிய பாராளுமன்றத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பினரையும் இணைத்துக்கொள்வோம் என்றார்