சுவிட்ஸர்லாந்தில் முனைப்பு

சுவிட்ஸர்லாந்தில் முனைப்பு
இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்விசேட தேவையுடைய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிட்ஸர்லாந்தில் வாழும் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த தமிழ்பேசும் சமூக ஆர்வலர்களால் முனைப்பு எனும் பெயரில் சமூக நலன் சார்ந்த அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுஇதற்கான அங்குராப்பணக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் நடைபெற்றது. இதில் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
தங்கள் அமைப்பால் இனங்காணப்பட்ட சில திட்டங்களை மிகவிரைவில் இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன்,முதற்கட்டமாக கிழக்குமாகாணத்தில் சில பிரதேசசெயலகப்பிரிவுகளில் தமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் ஏனைய பகுதிகளுக்கும் தமது வேலைத்திட்டங்கள் விஸ்தரிக்கப்படவுள்ளதாக அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன்புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் திருமலை மட்டக்களப்பு,அம்பாறைமாவட்டங்களைச்சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இவ்அமைப்பில் அங்கத்துவம் வகிக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்.மேலதிக விபரங்களுக்கு பின்வரும் மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்புகொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it





