Tuesday, September 07, 2010

தேடல்

பாத்தீனிய ஒழிப்பு செயல்திட்டம்

பாத்தீனிய ஒழிப்பு செயல்திட்டம்

வவுனியாவில் பாத்தீனிய ஒழிப்பு செயல்திட்டம் இன்று (திங்கள்) முதல் இரண்டு வாரத்திற்கு  ஆரம்பிக்கப்பட்டுள்ளது பாத்தீனிய செடி வவுனியாவில் ஆக்கிரமித்துள்ளது இதனை அழிப்பது தொடர்பான விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட்டு கிராமிய அமைப்புக்கள் தொண்டர்களுடைய உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என பாத்தீனிய ஒழிப்பு செயலணியினர் தெரிவித்தனர் எதிர்வரும் 24ம் திகதி வரை நடவடிக்கை கிராமம் கிராமமாக நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது

வவுனியாவில் நகரில் பல இடங்களிலுமே பாத்தீனியம் காணப்படுகின்றது குளக்கரைகள் மயானங்கள், மைதானங்கள் வீதி ஒரங்கள் குறிப்பிடதக்கது

இந்திய இராணுவம் அமைதிப்படையாக வந்து திரும்பிய  பின்னர் பாத்தீனியம் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.