தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரணியில்

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரணியில் நின்று செயல்படுவதே சிறந்தது -தர்மலிங்கம் சித்தார்த்தன்.
எதிர்வரும் பாராளுமன்றபொதுத்தேர்தலில் சிறுபான்மையின கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படுவது அவசியமாகின்றது என புளொட் அமைப்பின் தலைவர் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அதன் மூலமே எமது பலத்தையும் நிரூபித்து பேரம்பேசும் சக்தியாகவும் மாறமுடியும் பலத்தின் மூலம் ஜனாதிபதியுடன் பேசி தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கேனும் தீர்வு காணமுடியும் இது தொடர்பில் தாம் தமிழ்பேசும் கட்சி தலைவர்களுடன் பேசிவருவதாகவும் திரு சித்தார்த்தன் தெரிவித்தார்
எமது பிரச்சினை தெர்டர்பாக ஜனாதிபதியுடன்பேசியே தீர்க்கப்படவேண்டும் இந்த நிலையில் எமக்கிடையில் ஒட்டுமொத்த ஐக்கியமே அவசியமாகும் எனவும் சொன்னார் இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரணியில் நின்று செயல்படுவதே சிறந்தது எனவும் கூறினார்
