Tuesday, September 07, 2010

தேடல்

இடம்பெயர்ந்த மக்களை

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் மீண்டும் ஆரம்பம்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜனாதிபதி தேர்தல் காரணமான தடைப்பட்டிருந்த இந்த நடவடிக்கைகள் .இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது மீள்குடியேறும் மக்களுடைய வீடுகளை அமைத்துக்கொள்ள இந்தியாவின் நன்கொடையான கூரைத்தகடுகள் தேசநிர்மாண அமைச்சின் ஊடாக கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

செட்டிகுளம்- நிவாரணகிராமங்களில் தங்கியிருந் தவர்களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் மீள்குடியேறியுள்ள நிலையில் இ;ன்னமும் 70 ஆயிரம் பேர் மட்டுமே நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளனர் நிவாரண கிராமங்கள் திறந்தவிடப்பட்ட நிலையில் பெருமளவிலானவர்கள் வெளியேறியபோதிலும்  தங்கியுள்ளவர்களும் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.மீள்குடியேற்றத்திற்கு அடையாளம் காணப்பட்ட இடங்களில் வெடிபொருட்கள் அகற்றும் பணியில் இலங்கை இராணுவமும் சர்வதேச மிதிவெடி அகற்றும் குழுவினரும் ஈடுபட்டுவருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் கிழக்கு புறத்திலும் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் மேலும் ஒரு தொகுதிமக்கள் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவில் குடியமர்த்த அழைத்து செல்லப்படவுள்ளனர்

மீள்குடியமர்வுக்கு செல்லும் மக்களுக்கு இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதுடன் நிவாரண கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றது 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு தற்போது 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது ஆறு மாதகாலத்திற்கு உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்திலும் மீள்குடியேற்ற பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என திட்டப்பணி;ப்பாளர் தெரிவித்தார்.