தமிழ் பிரதிநிதித்துவம்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும்.
அம்பாறைமாவட்டத்தில் இவ்வாண்டும் தமிழ் பிரதிநிதித்துவத்தைப்பாதுகாக்க அங்குள்ள தமிழ்மக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
இம்முறை நடைபெறப்போகும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில்அம்பாறைமாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.அரசதரப்பில் இனியபாரதியும், ஈரோஸில் லால் என்பவரும்,ரி.எம்.வி.பியும், ஈ.பி.டி.பி, தமிழ்அரசுக்கட்சிஎன்பன போட்டியிடவுள்ளன.
இதேவேளை கடந்த தேர்தலில்55,553வாக்குகளைப்பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட 20ற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் அம்பாறைமாவட்டத்தில் ஒருகட்சியின் சார்பில் 10பேர் மாத்திரமே போட்டியிலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
