Tuesday, September 07, 2010

தேடல்

வெற்றிலையா?படகா

வெற்றிலையா?படகா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தனித்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பில் உள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் அரசியல் பீடக்கூட்டத்தின் போது, அதில் பங்கேற்ற பெருமபாலானோர், கட்சி பொதுத்தேர்தலில் தனித்தே போட்டியிடவேண்டும் என தமது விருப்பத்தை வெளியிட்டனர் இந்தநிலையில் இந்த விருப்பத்தை உடனடி தீர்மானமாக எடுக்காது, எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து நிலைமையை விளக்கிய பின்னர் முடிவை எடுப்பதென கட்சி இன்று தீர்மானித்ததாக கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

 

கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வெற்றிலைக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்ற அடிப்படையிலேயே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு விளக்கவுள்ளனர்.

 

ஜனாதிபதி இதற்கு சம்மதிக்காவிட்டால் வெற்றிலையிலேயே போட்டியிடவேண்டியேற்படும் எனத்தெரிவிக்கப்படுகின்றது.தமிழ்தேசியகூட்டமைப்பினரின் மட்டக்களப்புமாவட்ட பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காக ரி.எம்.வி.பியை தனித்து தேர்தலில் போட்டியிட சம்மதிக்கமாட்டார் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.வெற்றிலையா, படகா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.