மட்டக்களப்பு மாநகரசபையில் தகராறு

மட்டக்களப்பு மாநகரசபையில் தகராறு
மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாதாந்த சபைக்கூட்டத்தில் முஸ்லிம்காங்கிரஸ் உறுப்பினர் நாகூர் ரம்லானுக்கும்,சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் க.அருமைநாயகத்துக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்து பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
