திருக்கோணமலை கோணேஸ்வராவின்

திருக்கோணமலை கோணேஸ்வராவின் வீதி ஓட்டப்போட்டி
திருக்கோணமலை கோணேஸ்வரா இ.கி.ச.இந்துக்கல்லூரியை தேசியபாடசாலையாக்கிய தினத்தின் 17வது தின நினைவாக நடாத்தப்படும் வீதி ஓட்டப்போட்டி சனியன்று காலை 7மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.
பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான இப்போட்டிகளில் மூன்று மாணவர் பிரிவுகள் பங்குகொண்டன .இவை வெவ்வேறு வழிகளில் சென்று பிரதான பஸ்நிலைய வீதி வழியாக பாடசலை முன்பாக மீண்டும் வந்து முடிவடைந்தன. நகரின் பல பாகங்களிலும் பெற்றாரும் நலன் விரும்பிகளும் மாணவர்களை வீதிகள் தோறும் நின்று உற்சாகப்படுத்தியதுடன் நகரத்தில் இந்நிகழ்வு பரபரப்பை உண்டுபண்ணியதை அவதானிக்கமுடிந்தது.
இதில் மொத்தமாக 803 மாணவர்கள் பங்குகொண்டனர்.தரம் 6 தொடக்கம் 8வரை கொண்ட குழுவில் 333 மாணவர்களும்,தரம் 9தொடக்கம் 10வரை 243 மாணவர்களும்,தரம் 11தொடக்கம் 13 வரை 227 மாணவர்களும் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது.


