அட்டன் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்

அட்டன் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் நீதிமன்றில் ஆஜர்
சக்தி டிவி தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகஸ்தரைத் தாக்கியமைத்தொடர்பில் சந்தேக நபர்களில் ஒருவர் இன்று 5 ஆம் அட்டன் நீதிமன்றில் ஆஜரானார்.
இவரை எதிர்வரும் 9 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதிவான் சனுன் விதாரண உத்தரவிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் ஸ்ரீ ரங்காவின் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகஸ்தர் தாக்கப்பட்டுள்ளமைத்தொடர்பில் மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கமொன்றின்
அட்டன் நகர சபையின் தலைவரைப் பொலிஸார் கைது செய்ய வேண்டுமென குறிப்பிட்ட ஊடகம் பிரசாரம் செய்து வருகின்றமைக்குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் ஸ்ரீரங்கா தனது ஆதரவுடன் மலையகத்தில் ஐக்கிய தொழிற்சங்கம் என்ற தொழிற்சங்கத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு அந்தத்தொழிற்சங்கத்திற்கு அங்கத்தவர்களைச் சேர்த்துக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாகவும்
அதே வேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனது அமைப்புச்சார்பாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன..
இதே வேளை மேற்படி சம்பவத்தில் தமது கட்சி ஆதரவாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இ.தொ.கா.எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
அட்டனில் மாபெரும் பேரணி ஒன்றினை நடத்தவுள்ளமைக்குறிப்பிடத்தக்கது
