சாய்ந்தமருதில்199 குடும்பங்களுக்கு

சாய்ந்தமருதில்199 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
சாய்ந்தமருதூரில் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாய்ந்தமருது கரைவாகுவட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வொலிவேரியன் கிராமம் இன்றைய தினம் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஆழிப்பேரலை வீட்டுத்திட்டத்தின் மூலம் சுமார் 199 குடும்பங்களுக்கு இன்று பிற்பகல் அளவில் இந்த வீடுகள் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெனிசூலா நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுமார் ஏழு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடுகளை அமைச்சர் பேரியல் அஸ்ரப் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ மற்றும் வெனிசுலா நாட்டின் தூதுவர் மிலோனா சன்டனா ஆகியோர் திறந்துவைக்கவுள்ளனர்.
இதனிடையே ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாம்மாந்துறையில் நிர்மாணிக்கப்பட்ட 120 வீடுகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்பினால் கையளிக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
