நல்லூர் கிராமத்தின் நிலை

மூதூர் கிழக்கில் உள்ள நல்லூர் கிராமத்தின் நிலை.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கில் உள்ள நல்லூர் கிராமத்தின் பாடசாலை மாணவர்கள் பல்வேறு வளக்குறைபாடுகளுடன் சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்று வருகின்றனர்.
யுத்தத்தாலும் சுனாமியினாலும் பாதிக்க்பட்ட இம்மக்கள்வாழம் இக்கிராம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக முறையிடப்படுகின்றது.இந்த நிலையில் பெற்றார்களின் எந்தவித பங்களிப்பும் இன்றி இங்குள்ள மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய தேவையும் உள்ளது. மக்கள் மத்தியில் கல்வி தொடர்பான அக்கறையும் குறைவாகவே காணப்படுகின்றது. ஆசிரியர்கள் அனைவரும் அயல் கிராமங்களில் இருந்து வந்து கற்பித்திலில் ஈடுபடுகின்றனர்.
இந்தகைய சூழுலில் பாதிக்கப்பட்ட இப்பாடசாலையின் கட்டிட வசதிகளும் இன்னும் சீர் செய்யப்படாமையினால் மாணவர்களில் அடிப்படைக்கல்வியை போதிப்பதில் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் குறிப்பாக உடைந்த சேதமான கட்டிடத்தில் பிள்ளைகள் தரையில் இருந்த கல்வி கற்கும் நிலமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என பலரும் முறையிடுகின்றனர். இதனால் ஒழுங்காக பாடசாலையை நடத்த முடியாமல் அப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


