Tuesday, September 07, 2010

தேடல்

இடம்பெயர்ந்த மாணவர்களால் முற்றுகை.

வன்னி மாகாண கல்விப்பணிப்பாளர் அலுவலகம் இடம்பெயர்ந்த மாணவர்களால் முற்றுகை.

 

வவுனியாவில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வசதிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் பெற்றோர்களும் மாணவர்களும் இன்று காலை திங்கள் வன்னி மாகாண கல்விப்பணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

 

 

  இடம்பெயர்ந்த மாணவர்கள் வவுனியா நகர்புறபாடசாலைகளில் சுமார் ஆறாயிரம் பேர் உள்ளனர் இவர்களுக்கு எதிர்வரும் திங்கள்கிழமை முதல் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் வழமைபோல் பாடசாலை வகுப்புக்கள் நடைபெறும் என தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளார் திருமதி வீ ஆர் ஒஸ்வோலட் தெரிவித்தார்

 

 வன்னியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மாணவர்களுக்கு வவுனியா நகரப்புற பாடசாலைகளில் இணைத்துகொள்ளப்பட்டு மாலை நேர வகுப்புக்கள் நடைபெற்றது மாலை நேர வகுப்புகளுக்கு ஆசிரியர்களுடைய வரவு ஒழுங்கீனமற்றதாகவே அவதானிக்கப்பட்டது இதன் காரணமாக இந்த மாணவர்களுக்கு கல்வி செயற்பாட்டிற்காக வழமைபோன்றதொரு திட்டம் வகுக்கப்பட்டதுஅதற்குரியஇடமாக காமினி மகாவித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டது என வலயக்கல்விப்பணிப்பாளர் கூறினார்

 

இணைக்கப்பட்ட பாடசாலையில் இடம்பெயர்ந்த மாணவர்கள் தொடர்ந்தும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய வசதிகள் இல்லை என தெரிவிக்கும் அதிகாரிகள்  காமினி மகாவித்தியாலயத்தில் வழமைபோல் எதிர்வரும் திங்கள் முதல் வகுப்புக்கள் நடைபெறும் காமினிவித்தியாலயம் இடம்பெயர்ந்த வர்களுடைய தற்காலிக நிலையமாகவும். பின்னர் சரண் அடைந்தவர்களுடையநிலையமாகவும் செயல்பட்டது இப்போது அனைவரும் அங்கிருந்து  வெளியேறிய நிலையில் காமினி வித்தியாலயம்வெற்றிடமாகவே காணப்படுகின்றது ஆனாலும் வகுப்பறைக்கு ஏற்றவிதமான ஏற்பாடுகள் காணப்படவில்லை இதனை சீர்செய்யவே ஒரு வார காலம் அவகாசம் தேவைப்படுகின்றது என கல்வி திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

மருந்துகள் தெளிக்கப்பட்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யவேண்டும் அத்துடன்  வேறும் சில ஏற்பாடுகளும் செய்யப்படவேண்டியுள்ளதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்