மூதூர், கிண்ணியா கடற்பரப்பில்

மூதூர், கிண்ணியா கடற்பரப்பில் இரவில் மீன்பிடிக்கத்தடை
திருக்கோணமலை மாவட்டம் மூதூர், கிண்ணியா பிரசே கடற்பகுதியில்
இரவில் மீன் பிடிக்கச் செல்வதற்கு கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (31.01.2010) தொடக்கம் மீண்டும் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இதனால் பிரதேச வாசிகளது ஜீவனோபாயம் பாதிக்கப்படக் கூடிய நிலமை தோன்றியுள்ளது.
இலங்கையின் 6வது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இம் மாதம் ஆரம்பத்தில் இருந்து (05.01.2010) இப்பகுதியில் இருந்தும் எவ்வேளையிலும் கடலுக்கு மீன்படிக்கச் செல்வதற்கு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான விஜயவிக்கரம தெரிவித்திருந்தார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதய ஜனாதிபதி திருக்கோணமலை, மூதூர் தேர்தல் தொகுதிகளில் மிக்க குறைந்தளவு வாக்குகளையே பெற்றிருந்தார். எதிரணிவேட்பாளர் சரத்பொன்சேகா அதிக வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
