மதுவினை மறக்க வேண்டுமா?..
மதுவினை மறக்க வேண்டுமா? மதுரக்கனி அப்பிளை உண்ணுங்கள்
தங்கப் பழம் என்று புகழப்படும் அப்பிள் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும்
மிகவும் விரும்பும் பழமாகும். அப்பிள் பழத்தின் பிறப்பிடம் மத்திய ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளாகும். உலகம் முழுவதிலும் 6500க்கும் மேற்பட்ட வகைகளில் அப்பிள்கள் காணப்படுகின்றன.. உலகம் முழுவதிலும் அப்பிள் மதிப்பு வாய்ந்த பழமாக மதிக்கப்படுகிறதுபைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங்களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்பிள் உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் பெருகுவதற்குரிய பயன்களைத் தருகிறது. விற்றமின் குறைவினால் ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்தும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நாள்தோறும் ஒரு அப்பிள் உண்பது வைத்தியரை விரட்டும் என்பது ஆங்கில மொழி.
அப்பிள் பழத்தில் என்ன சத்துக்கள் இல்லை. உடலை வளர்க்கும் விற்றமின்களும், உடலியல் செயல்களை ஊக்குவிக்கும் தாதுப் பொருட்களும் உடல் உள் உறுப்புக்களும், சுரப்பிகளும் செயற்பட உதவும் நுண்ணூட்டச் சத்துக்களும் பல்வேறு அமிலங்களை சரியாகச் சுரக்கவைத்து, சீர்படுத்த உதவும் அமிலங்களும் அப்பிளில் காணப்படுகின்றன.அப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன அப்பிள் உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் பெருகுவதற்குரிய பயன்களைத் தருகிறது. விற்றமின் குறைவினால் ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்தும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆப்பிளிலுள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்கி குடற்பாதையிலுள்ள நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட வாய் மற்றும் தொண்டைப் பகுதியிலுள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன. வயதானவர்களுக்கு அப்பிள் மேற்தோலானது செரிக்கக் கடினமாக இருக்குமென்பதால் மேற்தோலை நீக்கி உட்கொள்வது நல்லது.. நீர்ச்சத்து ஏராளமாக உள்ள ஆப்பிள் பழத்தை கோடைக்காலத்தில் நன்கு உட்கொள்ளலாம்
நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும். இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர். இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நாம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை அப்பிள் பழங்களே.
மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க அப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து அப்பிளை சாப்பிட்டு வர விஸ்கி அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது. வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத அப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.
அப்பிள் பழம் மட்டுமல்ல அதனுடைய இலைகளும், விதைகளும், வேர்ப்பகுதியும், வேர்ப்பட்டையும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டதாகும்

